சத்தீஸ்கரில் நக்சலைட்கள் ஆவேச தாக்குதல் – பாஜக எம்எல்ஏ உள்பட 5 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள ஷியாம்கிரி பகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பீமா மாண்டவி உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்கள் பா.ஜ.க.வினர் சென்ற கார்களை நோக்கி சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். எம் எல் ஏவுடன் சென்ற பாதுகாப்பு படையினர் நக்சலைட்கலை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த தாக்குதலில் பாஜக எம்.எல்.ஏ. பீமா மாண்டவி மற்றும் பாதுகாப்பு படையை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.