கெரவலப்பிட்டிய மின் நிலையம் 1000 மில்லியன் டொலர் இழப்பைச் சந்திக்கும்
கெரவலப்பிட்டிய மின் நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதன்மூலம் இலங்கைக்கு 1000 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இழப்பு ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இன்று (திங்கட்கிழமை) காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார்.
மேலும் அமெரிக்க நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.