Main Menu

அரசாங்கத்தினால் வர்த்தக மாபியாக்களை கட்டுப்படுத்த முடியவில்லை- இராதாகிருஷ்ணன்

வர்த்தக மாபியாக்களை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே அரசாங்கம் இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹற்றனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வே.இராதாகிருஷ்ணன் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில்  பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.

கொரோனா மற்றும் டொலர் தட்டுப்பாட்டினால் மாத்திரம் இந்த நிலைமை ஏற்படவில்லை. அமைச்சுகளில் இடம்பெறும் ஊழல்களும் இதற்கு பிரதான காரணமாகும். சீனி, எண்ணைய், வெள்ளைப்பூடு என எல்லாவற்றிலும் ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன.

அதேபோன்று வர்த்தக மாபியாக்களை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் சட்டங்களை கொண்டுவந்தாலும், அவை அமுலுக்கு வருவதை காணமுடியவில்லை.

அத்துடன் வர்த்தக மாபியாக்கள், பொருட்களின் விலைகளை அதிகரிப்பதனால் பொதுமக்களுக்கே பாதிப்பு ஏற்படுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...