Main Menu

கண்டி–யாழ்ப்பாணம் ஏ-09 வீதிக்கு தற்காலிக பூட்டு

கண்டி – யாழ்ப்பாணம் ஏ-09 வீதியின் அலவத்துகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருகொட ஏழாம் மைல்கல் பகுதி, இன்று (21) நண்பகல் 12 மணி வரை மூன்று மணிநேரம் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி குறித்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கிய கனரக வாகனத்தையும் அதன் ட்ரெய்லரையும் அங்கிருந்து அகற்றும் நடவடிக்கைக்காகவே இந்தப் போக்குவரத்துத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனால், குறித்த காலப்பகுதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மாற்று வீதிகள்:

– கண்டியிலிருந்து மாத்தளை நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள்: கட்டுகஸ்தோட்டை, மடவளை, வத்தேகம, உக்குவளை மற்றும் அலவ்வளை ஊடாக ஏ-09 வீதியைச் சென்றடைய முடியும்.

– மாத்தளையிலிருந்து கண்டி நோக்கிப் பயணிக்கும் கனரக வாகனங்கள்: அலவ்வளை, உக்குவளை, வத்தேகம, மடவளை மற்றும் கட்டுகஸ்தோட்டை ஊடாக கண்டியைச் சென்றடைய முடியும்.

– மாத்தளையிலிருந்து கண்டி நோக்கிப் பயணிக்கும் இலகு ரக வாகனங்கள்: அலவத்துகொட, ஓவிஸ்ஸ, பூஜாபிட்டிய மற்றும் அம்பத்தண்ணை ஊடாக கட்டுகஸ்தோட்டையைச் சென்றடைய முடியும்.

எனவே, குறித்த காலப்பகுதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்தி, பொலிஸாரின் போக்குவரத்து அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.