Main Menu

நாட்டை மீள திறக்க சுகாதார பரிந்துரைகளை முன் வைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்கை ஒக்டோபர் முதலாம் திகதி தளர்த்துவதற்கு தேவையான உரிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போதைய தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு அக்டோபர் 1 ஆம் தேதி அதிகாலை 4.00 மணிக்கு முடிவடையவுள்ள நிலையில் சுகாதார, போக்குவரத்து மற்றும் ஏனைய பிரிவுகளினால் இந்த பரிந்துரைகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஊரடங்கு சட்டத்தினை மேலும் நீடிக்காமல் இருக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

மேலும் தற்போது நடைபெறும் சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியில் இதுவரை எந்த சிக்கலும் பதிவாகவில்லை என ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் ஊரடங்கு உத்தரவை நீக்குவதன் மூலம் நாட்டை மீண்டும் திறக்க சுகாதார பரிந்துரைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து விரிவான திட்டத்தை வகுக்க கொரோனா தடுப்பு செயலணி முடிவு செய்துள்ளது.

பகிரவும்...