குட்டி இளவரசருடன் முதல் அன்னையர் தினத்தை கொண்டாடினார் மேகன்!
அரச குடும்பத்தின் புதிய வாரிசான இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியரின் குழந்தைக்கு ஆர்ச்சி ஹரிசன் (Archie Harrison) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வின்சர் கோட்டையில் மகாராணி குழந்தையை முதல் முறையாக பார்வையிட்டதன் பின்னர் புதிய வாரிசின் பெயர் குறித்த அறிவிப்பு வெளியானது.
இந்தநிலையில் பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் அண்மையில் பிறந்த தங்களின் குட்டி இளவரசர் ஆர்ச்சியின் ஒளிப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
குறித்த ஒளிப்படத்தை வெளியிட்டு மேகன் தமது மகனுடன் முதன் முறையாக அன்னையர் தினத்தை கொண்டாடியுள்ளார்.
குட்டி இளவரசர் ஆர்ச்சியின் பாதங்களை மட்டுமே ஒளிப்படமாக பதிவிட்டுள்ளார் மேகன்.