Main Menu

குடியுரிமை திருத்த சட்டம் : தேவைப்பட்டால் திருத்தம் செய்கிறோம் என அமித்ஷா உறுதி!

குடியுரிமை சட்டத்திருத்தத்தில் திருத்தம் செய்யத் தயார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேற்குவங்கம், மேகாலயாவில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

அசாமில் 144 தடை உத்தரவையும் மீறி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 6 பேர் உயிரிழந்தனர்.

போராட்டங்கள் பரவுவதைத் தடுக்க, கவுகாத்தி உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

தற்போது நிலைமை சீரடைந்து வரும் நிலையில், 5 நாட்களுக்குப் பின்னர் கவுகாத்தி, திப்ருகர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் இணையதள சேவைகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் குடியுரிமை சட்டத்தில் தேவைப்பட்டால் திருத்தங்கள் கொண்டுவர தயார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை சட்டத்திருத்தத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

பகிரவும்...