காவல் துறையினரின் மகிழுந்துடன் மோதிய இளைஞன் படுகாயம்
உந்துருளியில் சாகசம் மேற்கொண்ட இளைஞன் ஒருவர் விபத்துக்குள்ளாகி பலத்த காயமடைந்துள்ளார். இவ்விபத்து ESSONNE நகரில் இடம்பெற்றுள்ளது. 23 வயதுடைய Ulis நகரைச் சேர்ந்த இளைஞன், ஞாயிற்றுக்கிழமை இரவு விபத்துக்குள்ளாகியுள்ளார். அதிவேகமாக பயணித்த குறித்த இளைஞர், காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதி, வீதியில் மிக நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர் மீட்புக்குழுவினர் அழைக்கப்பட்டு, இளைஞன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அனுமதி இன்றி வீதிகளில் உந்துருளி சாகசம் நிகழ்த்தினால் இரண்டுவருட சிறைத்தண்டனையும், €30,000 யூரோக்கள் தண்டப்பணமும் அறவிடப்படும் என உள்துறை அமைச்சர் Christophe Castaner சமீபத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.