காலம் அனைத்திற்கும் பதில் கூறும் – தினகரன்

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சி தோல்வியடைந்தமையால் பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது என்றும் அவை அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும் என்றும் அ.ம.மு.கவின் பொதுச்செயலாளர் டி.டிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் அஹ்ரகார சிறையில் சசிகலாவை சந்தித்த அவர், செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், தளபதிகள் யாரும் கட்சியில் இருந்து வெளியேறவில்லை என்றும் கட்சியின் உறுப்பினர்களே வெளியேறியுள்ளனர் எனவும் விளக்கமளித்துள்ளார்.
அத்துடன் வெளியில் பேசுபவர்கள் பதவி இருக்கின்ற மமதையில் பேசுகிறார்கள் என குறிப்பிட்ட அவர், காலம் அனைத்திற்கும் பதில் கூறும் என தெரிவித்துள்ளார்.