காத்தான்குடியில் வெடிபொருட்கள் மீட்பு – 8 மில்லியனுடன் மொஹமட் ராபிக் கைது
காத்தான்குடி பிரதேசத்தில் கடற் பிரதேசத்தில் குழி ஒன்றில் புதைக்கப்பட்டு இருந்து வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். சாய்ந்தமருது பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. கிடைக்கப் பெற்ற புலனாய்வுத் தகவலுக்கமைய இவை காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன. அதேநேரம் பயங்கரவாதிகளால் மறைத்து வைக்கப்பட்டுள்ள வெடி பொருட்கள் உட்பட அனைத்து ஆயுதங்களையும் தேடி கண்டுபிடிப்பதாகவும் காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மொஹமட் ராபிக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவருடம் இருந்து 8 மில்லியன் ரூபா பணமீட்கப்பட்டதாகவும், காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.