Main Menu

மேல் நீதிமன்ற நீதிபதி இளம்செழியன் அவர்களின் தந்தையார் காலமானார்

திருகோணாமலை மாவட்ட மேல் நீதிமன்றின் நீதிபதி இம்செழியன் அவர்களின் தந்தையார் சதாசிவம் மாணிக்கவாசகர் அவர்கள் இன்று கொழும்பில் காலமாகிவிட்டார்.
மாணிக்கவாசகர் அவர்கள் வேலணை கிழக்கு வேலணையை பிறப்பிடமாக கொண்டவர். வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.
இவர் வேலணை கிழக்கு மகாவித்தியாலயத்தில் நீண்டகாலமாக ஆசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்றவர்.
தீவகத்தின் நலனில் அக்கறைகாட்டியவர் பல சமூக அமைப்புகளில் தலமைதாங்கி பொதுச்சேவைகள் புரிந்தவர்.
வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் நிர்வாகத்தில் செயலாளராக இருந்து தொண்டாற்றியவர் மேலும் .
வேலணை கிராமத்தின் வரலாற்றை பறை சாற்றும் ஆய்வு நூலை பல அறிஞர்களின் பங்களிப்புடன் வேலணை ஓர் வரலாற்று அறிமுக நூல் என்ற பெயரில் பெருநூலாக்கி அதன் பதிப்பாசிரியராக இருந்தவர். இவ்நூல் இரண்டு முறை பதிப்புக்கள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோய் வாய்பட்டிருந்த மாணிக்கவாசகர் ஆசிரியர் இன்று 10/05/2019 கொழும்பில் காலமானார் .அன்னார் அமரத்துவம் அடையும் போது அவருக்கு வயது 89ஆகும்.

இவரின் மகன் திருகோணாமலை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளம்செழிபன் அவர்கள் துணிச்சல்மிக்க நேர்மையான நீதிபதி என பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...