Main Menu

கமலா ஹாரிஸினால் ஒருபோதும் அமெரிக்க ஜனாதிபதியாக முடியாது – ட்ரம்ப்!

கமலா ஹாரிஸினால் ஒருபோதும் அமெரிக்க ஜனாதிபதியாக முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘மெரிக்காவில் கொரோனா தடுப்பூசி உருவாக்கப்படுவது குறித்து கமலா ஹாரிஸ் சந்தேகம் எழுப்பியுள்ளாா்.

இதன் மூலம், நாட்டின் சாதனையை அவா் மக்களிடம் மறைக்க முயல்கிறாா். எனவே, அவரால் நாட்டின் ஜனாதிபதியாக ஒருபோதும் ஆக முடியாது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.