கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணிகளை அழைத்துச்செல்லும் விதிமுறையில் மாற்றம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் உள்நுழைவு மற்றும் பார்வையாளர்கள் கலரிக்குள் பயணியுடன் இருவர் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலையடுத்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில் பயணிகளை அழைத்துச்செல்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்ங்கப்படவில்லை.
இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளையே அல்லது வெளியேறும் பயணிகளையோ அழைத்துச் செல்லதற்கு பயணி ஒருவருடன் கலரிக்குள் இருவர் செல்வதற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விமான நிலைய கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார்