கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தல்!
கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதனால் நாளை(வியாழக்கிழமை) காலை வரை இவ்வாறு கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
பகிரவும்...