ஒற்றுமையாக செயற்பட வேண்டும்
ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு விடயத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழு வாதத்தை கைவிட்டு ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறினார்.