ஐந்தாவது முறையாக ஒடிசா முதல் மந்திரியாக நவீன் பட்நாயக் பதவியேற்றார்
சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்ற நவீன் பட்நாயக், தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஒடிசா மாநில முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார்.
ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 112 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 23 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன், காங்கிரசை பின்னுக்குத் தள்ளி பிரதான எதிர்க்கட்சியாக உருவாகி உள்ளது. காங்கிரஸ் 9 தொகுதிகளை கைப்பற்றியது.
இதற்கிடையே, ஒடிசா மாநிலத்தின் முதல் மந்திரியாக தொடர்ந்து 5வது முறையாக நவீன் பட்நாயக் பதவியேற்பார் என பிஜு ஜனதா தளம் தலைமை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்ற நவீன் பட்நாயக், தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஒடிசா மாநில முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார்.