ஐநா சபையில் இன்று பிரதமர் மோடி இந்தியாவின் வலிமை குறித்து உரை நிகழ்த்துகிறார்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபையின் 75-வது கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி இரண்டாவது முறையாக இன்று உரைநிகழ்த்துகிறார்.
இந்தக் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்பட 112 நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்க உள்ளனர். சர்வதேச அளவிலான பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
ஐ.நா., பொதுசபையின் 75 ஆண்டு கால வரலாற்றில், முதல் முறையாக ஆண்டுப் பொதுக் கூட்டம் உலகத் தலைவர்கள் நேரடியாக பங்கேற்காமல், மெய் நிகர் முறையில் நடைபெற உள்ளது. அதாவது உலகத் தலைவர்கள் அனைவரும் தங்களது உரையை முன்கூட்டியே விடியோவில் பதிவிட்டு அனுப்பி, அதனை கூட்டத்தின் போது ஒளிபரப்பும் வகையில் நடத்தப்பட உள்ளது.
பொதுக் கூட்டத்தின் நிகழ்ச்சிப்படி, இன்று உள்ளூர் நேரப்படி காலை 6 மணியளவில் (இந்திய நேரப்படி மாலை 6.30 மணி) பிரதமர் நரேந்திர மோடியின் உரை இடம்பெற உள்ளது.அடுத்த இரண்டு வாரத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படும் பொது விவாதம் இறுதி செய்யப்படும் என்றும், கடந்த செப். 22-ம் தேதி தொடங்கிய பொது விவாதம் செப்.29 வரை நடைபெறும்.ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக உரையாற்ற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...