Main Menu

ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் காலமானார்!

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் தாயார் கரீமா பேகம் இன்று (திங்கட்கிழமை) உடல்நலக்குறைவால் காலமானார்.

அவரது மறைவுக்கு பிரபலங்கள், இரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கடந்த 1992-ம் ஆண்டு ரோஜா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 145க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

சிறுவயதிலேயே தந்தை இறந்துவிட்டதால் பெரும்பாளும் தாயின் அரவணைப்பிலேயே ஏ.ஆர்.ரகுமான் வளர்ந்தார். ஏ.ஆர்.ரகுமானின் இசை பயணத்திலும் அவரது தாய் கரீமா பேகம் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.