ஏழு நாள் சுற்றுப் பயணமாக மோடி அமெரிக்கா விஜயம்!

நியூயோர்கில் நடைபெறும் ஐ.நா பொதுசபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும், மேலும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.
பிரதமர் மோடி ஏழுநாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்வதை முன்னிட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், ‘ஹூஸ்டனில் நடைபெறும் ஹவுடி – மோடி நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி தன்னுடன் முதல்முறையாக பங்கேற்பது மிகுந்த பெருமைக்குரியது எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரு நாட்டு மக்களும் பயன்பெறும் வகையில் இருதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்துவது குறித்து இதன்போது கலந்தாலோசிக்கப்படும் எனத் தெரிவித்த அவர், நிவ்யோர்க்கில் நடைபெறவுள்ள ஐநா சபை பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.