எய்ட்ஸ் பாதித்த 45 குழந்தைகளுக்கு தந்தையான சாலமன் ராஜ்
சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் சாலமன் ராஜ் என்பவர், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு, குடும்பத்தினரால் கைவிடப்பட்ட 45 குழந்தைகளைத் தத்தெடுத்து அசத்தியுள்ளார்.
மற்றவர்களுடைய தவறினால் பாதிக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகள் இவர்கள் என அவர் தெரிவித்ததார். அத்தகைய 45 குழந்தைகளுக்கு தான் அப்பா என்பது மகிழ்ச்சியளிப்பதாக சாலமன் கூறியுள்ளார்.
குழந்தைகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதே தனக்குள்ள மிகப்பெரிய பொறுப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு வந்த குழந்தைகளுக்கு அப்பா என்ற ஸ்தானத்தை எடுத்துக் கொண்ட சாலமன் ராஜாவின் மனிதநேயத்தை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.