எத்தனை ஸ்டாலின், தினகரன் வந்தாலும் ஆட்சியை கலைக்க முடியாது – ஜெயக்குமார்
13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு என்பது பெரிய விவகாரம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை எழும்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜைன கோவிலின் குடமுழுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க யாராலும் முடியாது என்றார்.
7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசின் தீர்மானத்தை ஆளுநர் ஏற்கவில்லை என கூறுவது தவறு என்றும் தமிழக அரசு ஆளுநருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.