எதிர்பாராத, அவமான கரமான நிகழ்வு: தென் கொரியாவிடம் மன்னிப்புக் கேட்டார் கிம்
கொரியக் கடற்பகுதியில் தென்கொரியர் ஒருவர் தவறுதலாக கொல்லப்பட்டதற்கு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
தென்கொரியாவைச் சேர்ந்த மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கொரோனா எச்சரிக்கை நடவடிக்கையாக வடகொரியாவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் இந்தத் தாக்குதலுக்கு வடகொரியா ஜனாதிபதி கிம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார் எனவும் இது எதிர்பாராத மற்றும் அவமானகரமான நிகழ்வு என அவர் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் தென்கொரிய அரச அலுவலகம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடகொரியாவின் எல்லைப் பகுதி நகரான கேசாங்கில் கொரோனா அறிகுறிகளுடன் ஒருவர் கடந்த ஜூலையில் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த நகரின் எல்லைகள் அனைத்தையும் மூடி முழு ஊரடங்கு பிறப்பித்து கிம் ஜாங் உன் உத்தரவிட்டார்.
இந்நிலையில். பின்னர் ஊரடங்கு நீக்கப்பட்ட நிலையில், எல்லை மூடலை வடகொரியா தொடர்ந்திருந்த நிலையில் கொரியக் கடற்பகுதியில் வைத்து தென்கொரிய கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.