ஈரான் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் நாட்டிற்கு வருகை

ஈரான் வெளிவிவகார அமைச்சர் Hossein Amir-Abdollahian நேற்றிரவு(19) நாட்டிற்கு வருகைதந்துள்ளார்.
அவர் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளார்.
ஈரான் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் நேற்றிரவு 10.45 அளவில் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலைய கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அலி சப்ரியின் அழைப்பிற்கிணங்க இந்த விஜயம் அமைந்துள்ளது.
ஈரான் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் நாளை(21) வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது ஈரான் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
ஈரான் வெளிவிவகார அமைச்சருடன் அந்நாட்டின் ஜனாதிபதி அலுவலகம், எரிசக்தி அமைச்சு, வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்றும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பகிரவும்...