இளவரசி மெர்க்கலின் முதல் கணவர் தனது காதலியை திருமணம் செய்துகொண்டார்
பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கலின் முதல் கணவரும், ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளருமான டிரிவர் இங்கல்ஷன் தனது காதலியை சனிக்கிழமை திருமணம் செய்துகொண்டார்.
கலிபோர்னியாவில் ஹொட்டல் ஒன்றில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.
42 வயதான டிரிவர் இங்கல்ஷன், ஊட்டச்சத்து நிபுணரான டிரேஸி குர்லாந்திடம் கடந்த ஆண்டு யூன் மாதம் தனது காதலை தெரியப்படுத்தியுள்ளார். கடந்த ஓராண்டாக இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்திற்கு முந்தைய நாள் மணமக்கள் Rosewood Miramar கடற்கரை பகுதியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இளவரசி மேகன் மெர்க்கலும் , டிரிவர் இங்கல்ஷனும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். கடந்த 2011 ஆம் ஆண்டு இவர்கள் விவாகரத்து செய்துகொண்டதையடுத்து மெர்க்கல், இளவரசர் ஹரியை காதல் திருமணம் செய்துகொண்டு தற்போது ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேகன் மெர்க்கல் அரச குடும்பத்து மருமகளாகிவிட்ட நாள் முதல், அதுகுறித்து கருத்து தெரிவிப்பதற்கு மறுப்பு தெரிவித்து வந்த டிரிவர், ஊடகங்களிடம் இருந்து விலகியே இருந்தார். மேலும் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்திகளையும் வெளியாவதை தவிர்த்து வந்த நிலையில், தற்போது இவரது திருமண செய்தி வெளியாகியுள்ளது.