இளவரசர் ஹரி , மேகன் இருவரும் பிறந்த குழந்தையை உலகிற்கு அறிமுகம்
பிரிட்டிஷ் இளவரசர் ஹரி , அவரது மனைவி மேகன் இருவரும் தங்களுக்குப் பிறந்த ஆண் குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்துவைத்துள்ளனர்.
விண்ட்சர் அரண்மனையில் ஊடகத் துறையினரைத் தங்கள் தவப்புதல்வருடன் அவர்கள் சந்தித்தனர்.
பிள்ளை பெற்றது ஒரு கனவுலக நிகழ்ச்சிபோல் தோன்றுவதாக அவர்கள் கூறினர்.
திருமணமான ஓராண்டுக்குள் அரச தம்பதி ஹரி – மேகனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.