இல் து பிரான்சுக்குள் 32 இடங்களில் இலவச கொவிட் 19 பரிசோதனை மையங்கள்
இல் து பிரான்சுக்குள் புதிதாக 32 இடங்களில் கொவிட் 19 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறித்த நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு நேற்று திங்கட்கிழமை முதல் ‘இலவச பரிசோதனைக்கான’ பற்றுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. பிராந்திய சுகாதார நிறுவனம் இந்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இல் து பிரான்சுக்குள் வசிக்கும் அனைத்து மக்களும் சரியான RT PCR பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதே அவசியமான ஒன்று என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seine-et-Marne (77) Melun மற்றும் Montereau-Fault-Yonne.
Yvelines (78) Elancourt, Les Mureaux, Limay, Mantes-la-Jolie, Mantes-la-Ville மற்றும் Trappes.
Essonne (91) Evry-Courcouronnes மற்றும் Grigny.
Hauts-de-Seine (92) Colombes, Gennevilliers, La Garenne-Colombes மற்றும் Nanterre.
Seine-Saint-Denis (93) Bobigny, Bondy, Drancy, Epinay-sur-Seine, Gagny, Le Bourget, Sevran மற்றும் Stains.
Val-de-Marne (94) Limeil-Brévannes மற்றும் Villejuif.
Val-d’Oise (95) Argenteuil, Bezons, Cergy, Garges-lès-Gonesse, Gonesse, Goussainville, Sarcelles மற்றும் Villiers-le-Bel.
ஆகிய நகரங்களில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பகிரவும்...