Main Menu

இன்று முதல் பிரான்ஸில் மின்சார கட்டணம் அதிகரிப்பு!

இன்று முதல் பிரான்ஸில் மின்சார மற்றும் எரிவாயு கட்டணங்களில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மின்சாரக் கட்டணம் இன்று முதல் 5.9 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

25 மில்லியன் வீட்டு உரிமையாளர்கள் இந்த விலையேற்றத்துக்கு முகங்கொடுக்கவுள்ளனர்.

குறித்த விலையேற்றத்தினால் வருடத்துக்கு €85 மேலதிகமாக செலுத்த நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்று முதல் எரிவாயுவின் விலையேற்றம் 0.2 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.