இந்திய நாடாளுமன்ற தேர்தல் – கட்சி தலைவர்கள் வாக்களிப்பு
இந்திய நாடாளுமன்றின் 4ஆம் கட்ட தேர்தல் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்று வருகின்ற நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல பிரபலங்களும் வாக்களித்து வருகின்றனர்.
அந்தவகையில் தெற்கு மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் வாக்களித்துள்ளார்.
அதேபோல பீகாரின் பேகுசராய் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான கன்னையா குமார் வாக்களித்துள்ளார். இதேவேளை மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா தொகுதியில் அம்மாநில முதல்வர் கமல்நாத் வாக்களித்துள்ளார்.
அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி திரை பிரபலங்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக மும்பையில் நடிகை பிரியங்கா சோப்ரா வாக்களித்துள்ளார். மேலும் மும்பை ஜுஹுவில் உள்ள வாக்குச்சாவடியில் மாதுரி தீக்ஷித் வாக்களித்துள்ளார்.