Main Menu

ஆப்கானிஸ்தானில் தற்கொலை கார் குண்டு வெடிப்பில் 26 ஆப்கானிய பாதுகாப்பு வீரர்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 26 பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கு மாகாணமான கஸ்னியின் தலைநகர் கஸ்னியின் புறநகர் பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் வைத்தியாசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கஸ்னியில் ஒரு தற்கொலை குண்டுதாரி வெடிபொருட்கள் நிறைந்த ஒரு வாகனத்தை வெடிக்கச் செய்ததை உள்துறை அமைச்சின் ஊடகப்பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும் இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பினரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.