Main Menu

ஆபாச இணையத் தளங்கள் பிரான்சில் முடக்கம்?

ஆபாச படங்கள் கொண்ட இணையத்தளங்கள் அனைத்தும் பிரான்சில் முடக்கப்பட உள்ளன.

Pornhub, Youporn, Xvideos, RedTube உள்ளிட்ட ஏராளமான இணையங்கள் முடக்கப்பட உள்ளன. வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் இந்த தளங்கள் முடக்கப்பட உள்ளதாக Tribunal judiciaire de Paris அறிவித்துள்ளது.

பிரான்சில் ஆபாச இணையத்தளங்கள் மிக இலகுவான சிறுவர்களை சென்றடைவதாகவும், இதை தடுக்கும் முகமாக இந்த தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கபப்ட்டுள்ளது.

e-Enfance மற்றும் Voix de l’Enfant போன்ற குழந்தைகள் பாதுகாப்பு நிறுவனங்கள் இந்த ஆபாச இணையத்தளங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்தது.

இந்த இணையத்தை முடக்கும்படி Orange, SFR, Bouygues Télécom, Free, Colt Technologies Services மற்றும் Outre mer Télécom இணைய வழங்குனர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் இணைய வழங்குனர்களால் இதனை மேற்கொள்ள முடியாது என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.