அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயாராகின்றது ஹக்கீம், ரிஷாட், திகாம்பரம் தரப்பு?
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோரின் கட்சிகள் ஆதரவளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிங்கள இணைய ஊடகமொன்று இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசாங்கத்தின் உயர்மட்டத்துடன் இவர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியிலுள்ள ஏதேனும்மொரு தரப்பு 20 இற்கு ஆதரவு வழங்க மறுக்கும்பட்சத்தில் இவர்களின் ஒத்துழைப்பை பெறும் நோக்கிலேயே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியன கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின்கீழ் போட்டியிட்டிருந்தன.
எனினும் தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருடன் இவர்கள் முரண்பட்டிருந்தனர்.
இந்தநிலையிலேயே ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோரின் கட்சிகள் ஆதரவளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.