அம்பாறை- பொத்துவில்லில் நிலநடுக்கம்
அம்பாறை- பொத்துவில் கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.44 மணியளவில் 4.0 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை மாட்ட அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.
பொத்துவில்- சர்வோதயபுரம், சின்னஊறணி, ஜலால்தீன்சதுக்கம், களப்புகட்டு பிரதேசங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை எனவும் அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நிலநடுக்கத்தினை எம்மாலும் உணரக்கூடியதாக இருந்ததாகவும் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது