Main Menu

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் -நவோமி ஒசாகா சம்பியன்!

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில், ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா, பெலாரசை சேர்ந்த விக்டோரியா அஸரென்கா ஆகியோர் மோதினார்.

முதல் செட்டை 6-1 என அஸரென்கா எளிதில் கைப்பற்றினார். இதனால் அவர் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நவோமி ஒசாகா 2-வது செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி செட்டை 6-3 என ஒசாகா கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டிலும் நவோமி ஒசாகா 6-3 எனக் கைப்பற்றி 1-6, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் அஸ்ரென்காவை வீழ்த்தி நவொமி ஒசாகா சம்பியன் பட்டம் வென்றார்.