அமெரிக்காவில் யூத பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்
அமெரிக்காவின் மெம்பிசில் நகரில் யூதப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்பள்ளிக்குள் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைய முயன்றனர். அவர் துப்பாக்கியால் பல முறை சுட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மர்ம நபர், பள்ளிக்குள் செல்ல விடாமல் துப்பாக்கி சூடு நடத்தினார். உடனே அந்த மர்ம நபர் காரில் ஏறி தப்பி சென்றார். இதனால் அதிர்ஷ்டவசமாக பள்ளி மாணவர்கள் காயமின்றி தப்பினர். தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் தேடினர். அப்போது அவரை துப்பாக்கியால் சுட்டு மடக்கி பிடித்தனர். காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மர்ம நபர் யார் மற்றும் துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து போலீசார் தகவல் தெரிவிக்கவில்லை.