அண்ணியுடன் முதன்முறையாக இணைந்து நடிப்பது உற்சாகமளிக்கிறது – கார்த்தி
முதன்முறை அண்ணியுடன் இணைந்து நடிப்பது தனக்கு உற்சாகமளிப்பதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
நடிகர் கார்த்தியும் நடிகை ஜோதிகாவும் இணைந்து நடிக்கும் முதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (சனிக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளது.
இது குறித்த அறிவிப்பை நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில், “முதல் முறை அண்ணியுடன் இணைந்து நடிப்பதால் த்ரில்லாக உள்ளது. ஜீத்துஜோசப் அவர்களுடன் பணிபுரிவதில் மகிழ்ச்சி. சத்தியராஜ் அவர்கள் இந்த படத்தில் இணைந்திருப்பது மிகப்பெரிய பலம்” என கார்த்தி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பெயர் குறிப்பிடப்படாத இந்த திரைப்படத்தினை இயக்குநர் ஜித்துஜோசப் இயக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.