Main Menu

TikTok சமூக வலைத் தளம்: இணைந்து பணியாற்றும் Pôle emploi

பிரெஞ்சு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகமாக்குவதற்காக Pôle emploi நிறுவனம் சமூக வலைத்தளம் ஒன்றுடன் இணைந்து பணியாற்ற உள்ளது.

இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ள TikTok சமூக வலைத்தளமூடாகவே இணைந்து இந்நிறுவனம் பணியாற்ற உள்ளது. வேலை வாய்ப்பினை இலகுவாக இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கவும், தொழில் வாய்ப்புகள் தொடர்பான விளக்கங்கள், சந்தேகங்கள் போன்றவற்றை சிறிய காணொளிகளூடாக வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தொழில் பயிற்சி கற்கை நெறிகளையும் ஒழுங்கமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக சில டிக்டொக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன், சில டிக் டொக் பயனாளர்களுடன் இணைந்து பணியாற்றவும் உள்ளது.

இந்த திட்டம் மூலம் 15-24 வயதுக்குட்பட்ட இளைஞர்களை எதிர்காலத்த்துக்கு தயார்ப்படுத்துவது பிரதான நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MissionEmploi எனும் குறியீட்டு வார்த்தை மூலமாக மேலதிக விபரங்களை தேடி அறிந்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பகிரவும்...