Main Menu

RER B தொடருந்து சேவைகளில் புதிய மாற்றம்.

Gare du Nord – l’aéroport Roissy-Charles-de-Gaulle நிலையங்களுக்கிடையே பயணிக்கும் RER B தொடருந்து சேவைகளில் புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

Gare du Nord இல் இருந்து l’aéroport Roissy-Charles-de-Gaulle நிலையத்துக்கு நேரடியாக பயணிக்கும் RER B தொடருந்து, விரைவில் d’Aulnay-sous-Bois நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி இரு நிலையங்களுக்கிடையே நேரடியாக பயணிக்கும் அனைத்து RER B தொடருந்துகளும், வரும் திங்கட்கிழமை 29 ஆம் திகதி முதல் d’Aulnay-sous-Bois நிலையத்தில் நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

d’Aulnay-sous-Bois நிலையத்தில் நிறுத்துவதால் பயண நேரத்தில் எந்த மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை எனவும், வழக்கம் போல் Gare du Nord இல் இருந்து l’aéroport Roissy-Charles-de-Gaulle நிலையத்துக்கு 30 நிமிடங்களில் தொடருந்து பயணிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாள் ஒன்றுக்கு 30,000 பயணிகள் பயன்பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பகிரவும்...