Main Menu

Gare du Nord ரயில் நிலைய வெடிபொருள் அச்சுறுத்தல்: பரிஸில் பாதுகாப்பு தீவிரம்!

பரிஸில் மிகவும் பரபரப்பாக இயங்கும் Gare du Nord ரயில் நிலையத்திலிருந்து வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அங்கு பொலிஸார், பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பலமுறை போலியான தொலைபேசி அழைப்புகள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது இச்சம்பவத்தினால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.

நேற்று (வெள்ளிக்கிழமை) Gare du Nord ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

ரயில் நிலையத்தில் நடைபெற்ற சோதனைகளின் காரணமாக பொதுமக்கள் சுமார் 40 நிமிடங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. மேலும் இதர ரயில்கள் அனைத்தும் வழக்கம் போல் இயக்கப்பட்டதாக ரயில்வேத்துறை நிறுவனமாக எஸ்என்சிஎஃப் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பொலிஸார் நடத்திர தீவிர சோதனையின் போது, மர்ம பை ஒன்றில் இருந்து வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

எனினும், இந்த பொருள் இராணுவம் பயிற்சிக்கு பயன்படுத்தும் வெடிக்காத போலி சுற்று என கூறப்படுகின்றது.

லண்டன் மற்றும் நெதர்லாந்து கத்திக்குத்து சம்பவங்களைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த சம்பவத்தால் ஐரோப்பாவில் பதற்றமான சூழல் காணப்படுகின்றது.

பகிரவும்...