இலங்கை
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் மோதி விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கலனிகம மற்றும் தொடங்கொட ஆகிய இடங்களுக்கு இடையே ஒரு வாகன விபத்து ஏற்பட்டுள்ளது. மத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றிற்கும், வேறு பல வாகனங்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதன் விளைவாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தைத்மேலும் படிக்க...
22 ஆவது திருத்தச் சட்டம்; சபாநாயகரின் தீர்ப்பு நாளை அறிவிப்பு

அரசியலமைப்பின் 22-வது திருத்தத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உள்ளடக்கிய இரகசிய அறிக்கை, சபாநாயகரால் நாளை (22) நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விவகாரம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் முடிவை சபாநாயகர் பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்துமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; முக்கிய வழக்கின் தீர்ப்பு நாளை

இலங்கையின் மிக மோசமான துயரச் சம்பவங்களில் ஒன்றான 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பை, கொழும்பு சிறப்பு மூவர் அடங்கிய மேல் நீதிமன்றம் நாளை (22) வழங்கவுள்ளது. நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஷ்ஷங்க மற்றும் ராமநாதன்மேலும் படிக்க...
பட்டதாரி வேலையின்மையில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்

இலங்கையில் உயர்கல்வி பெற்ற இளைஞர்களில் சுமார் 43 சதவீதம் பேர் வேலையின்றி இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள ஆய்வு தெரிவிக்கிறது. இது தீவு நாடு எதிர்கொள்ளும் கடுமையான வேலையின்மை நெருக்கடியை எடுத்துக்காட்டுகிறது. சர்வதேச நாணய நிதியம் (IMF) உயர்கல்வியைமேலும் படிக்க...
சட்டம் அனைவருக்கும் சமமாகச் செயற்படுவதே சட்டத்தின் ஆட்சி

சட்டமானது அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படுவதே அரச நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் அடிப்படைத் தூணாகும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசு சேவையிலுள்ள அனைத்து அதிகாரிகளும் நினைவில் கொள்ள வேண்டிய அடிப்படைமேலும் படிக்க...
அனோஜனின் விடுதலைக்காக கையெழுத்து சேகரிப்பு

சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவர இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, நற்பிட்டிமுனை பகுதியில் இன்று (20) விசேட கையெழுத்து சேகரிப்பும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டன. சமூக ஊடகப் பதிவொன்றைத்மேலும் படிக்க...
அனோஜனை மீட்க அரசு முழு அளவில் செயற்படும் – பிமல்

சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனை மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் அதிகபட்ச தலையீட்டை செலுத்தியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி பதிலளிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,மேலும் படிக்க...
நாட்டில் தொடரும் கனமழை: பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வு

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாகப் பல பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது வேகமாக உயர்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. ஈரவலயப் பகுதிகளில் மழைவீழ்ச்சி குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பைக் காட்டியுள்ளதாக அத்திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர்மேலும் படிக்க...
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது

போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்காக மற்றவர்களுக்குச் சொந்தமான 48 கடவுச்சீட்டுகளைத் தன்வசம் வைத்திருந்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன்னாள் அலுவலக உதவியாளர் ஒருவர் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து கடவுச்சீட்டுகள், பணத் தாள்களின் பாதுகாப்பு அடையாளங்களைப் பரிசோதிக்கும் போலி இயந்திரம்மேலும் படிக்க...
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது

கிளிநொச்சி பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பரந்தன் சோதனைச் சாவடியில் ஐந்து சந்தேக நபர்கள் நேற்று (19) கைது செய்யப்பட்டனர். வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொரிகளின் அனுமதிப் பத்திரங்களை கிளிநொச்சி பொலிஸ் நிலைய அதிகாரிகள் பரிசோதித்துக் கொண்டிருந்தபோதுமேலும் படிக்க...
ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாடு முழுவதும் நிலவும் கடும் மழை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கைகள் இன்று (20) காலை 7:00 மணிக்கு வெளியிடப்பட்டன. இவை நாளை (21) காலைமேலும் படிக்க...
அனோஜன் விவகாரத்தில், பிரதமர் மோடி-சவுதி இளவரசர் சல்மான், நட்பை பயன்படுத்துங்கள்! ஜனாதிபதி அனுரவிடம் மனோ கோரிக்கை!

இலங்கை இளைஞர் அனோஜன் சிவராசா விவகாரத்தை தீர்க்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA) தலைவர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி, சவுதி அரேபிய இளவரசரும்,மேலும் படிக்க...
பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய ‘இண்டர்போல்’ ஊடாக ‘நீல அறிவித்தல்’ கோரிக்கை

தற்போது வெளிநாட்டில் வசிக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கண்டறிவதற்காக ‘இன்டர்போல் நீல அறிவிப்பு’ (Interpol Blue Notice) ஒன்றைப் பிறப்பிக்கக் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். மாத்தறை, பிரவுன்ஸ்ஹில் பகுதியில் காணி ஒன்றை கொள்வனவுமேலும் படிக்க...
‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள்

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கை புலம்பெயர் தொழிலாளி சிவராசா அனோஜனைப் பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வருமாறு, அவரது தாயார் இலங்கை அரசாங்கத்திடமும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். நபிகள் நாயகத்தை அவமதிப்பதாகக் கருதப்பட்ட ஃபேஸ்புக்மேலும் படிக்க...
குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் கைது

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திட்டமிட்ட குற்றச் செயலுடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டு ஒன்றைமேலும் படிக்க...
நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (18) மீண்டும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள ஊழல் வழக்கு ஒன்று விசாரணைகளுக்காகவே சிறைச்சாலை அதிகாரிகளால், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றுக்கு அவர் சற்றுமுன்னர் அழைத்து வரப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...
அதிவேக வீதிகளில் ஆசனப்பட்டி அணிவது நாளை முதல் கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் பயணிகள் இருக்கைப்பட்டிகள் (seatbelt) அணிவதை கட்டமாயமாக்கும் விதிமுறை, நாளை (19) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிவேக நெடுஞ்சாலைகளில் இருக்கைப் பட்டிகள் (seatbelt) அணியாமல் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக நாளைமேலும் படிக்க...
இரண்டாவது நாளாகவும் தொடரும் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம்

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளரை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தம் இன்றும் தொடர்வதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMA) தெரிவித்துள்ளது. நேற்று தொடங்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை இன்று நள்ளிரவு வரைமேலும் படிக்க...
பொருளாதார மீட்சியில் இலங்கை சரியான பாதையில் – IMF குழுவிடம் ஜனாதிபதி

இலங்கைப் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மைக்கான பாதைக்கு வந்துள்ளமை அண்மைய பல பொருளாதார அளவுகோள்களினால் தெளிவாகியுள்ளதாகவும், அந்த ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் நாட்டை மாற்றத்திற்குரிய ஒரு யுகத்தை நோக்கி கொண்டு செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். அதேபோல், நாடுமேலும் படிக்க...
யோஷித மற்றும் கரன்னாகொடவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டது. இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகளானமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- …
- 480
- மேலும் படிக்க
