இலங்கை
தேர்தல் சட்டத்திலுள்ள குறைபாடுகள் சிறந்த சமூகத்தை கட்டி எழுப்புவதற்கு தடையை ஏற்படுத்துகின்றன ; ஜனாதிபதி
நாட்டின் சட்டக் கட்டமைப்பும் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்தில் உள்ள சில குறைபாடுகளினதும் காரணமாக சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு தடைகள் உருவாவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். சிறந்த அரசியல் கலாசாரமொன்றிற்காக முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகள் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித்மேலும் படிக்க...
மக்களுக்காக என்னை அர்ப்பணிப்பதே எனது நோக்கம்: சஜித்
மக்களுக்காக என்னை அர்ப்பணிப்பதே எனது நோக்கம். தேசிய பாதுகாப்பு, சிறந்த முற்போக்கு, ஐக்கிய இலங்கை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு எனது சேவைகள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஓட்டமாவடியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சஜித்மேலும் படிக்க...
மைத்திரி மகிந்த சந்திப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற இந்த சந்திப்புப்பில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் காலமான குருணாகல் மாவட்டமேலும் படிக்க...
அமெரிக்காவின் பயண எச்சரிக்கை தவறாக பரப்புரை செய்யப் படுவதாக குற்றச்சாட்டு !
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட பயண எச்சரிக்கையை தவறாகப் புரிந்துகொண்டு, சில ஊடக நிறுவனங்களும், தனிநபர்களும் மற்றொரு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டுள்ளதாக அரசாங்கத்தின் தேசிய ஊடக மையம் தெரிவித்துள்ளது. மற்றொரு பயங்கரவாத தாக்குதல் குறித்த வதந்தி முற்றிலும்மேலும் படிக்க...
நல்லூர் கந்தன் ஆலய கொடியேற்றம் இன்று
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. பகல் 10 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகும். எதிர்வரும் 29ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் தீர்த்தத் திருவிழாவும்மேலும் படிக்க...
இரு புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு
புதிய இராஜாங்க அமைச்சர்கள் இருவர் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். திருமதி. அனோமா கமகே – பெற்றோலிய வள அபிவிருத்தி இராஜாங்கமேலும் படிக்க...
மூன்றாவது அணி சாத்தியமில்லை – கெஹெலிய
அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் சுதந்திரக் கட்சியினர் இணைந்து மூன்றாவது அணி ஒன்றை உருவாக்கும் சாத்தியம் மிகவும் குறைவாக இருக்கின்றது. அவ்வாறு மூன்றாவது அணி உருவாகுவதற்கான அரசியல் சூழல் தற்போது இல்லை என்று மஹிந்த அணியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெலமேலும் படிக்க...
ஆக்கபூர்வ செயற்பாடுகள் முன்னெடுக்கா விட்டால் மக்கள் எம்மை மன்னிக்க மாட்டார்கள்
அரசின் பதவிக்காலம் முடிவடைவதற்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.அவ்வாறில்லாவிட்டால் மக்கள் ஒருபோதும் எம்மை மன்னிக்க மாட்டார்கள் என்பதுடன் மக்களை ஏமாற்ற முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.மேலும் படிக்க...
களமிறங்கினால் வெல்வது உறுதி!
“ஜனாதிபதித் தேர்தலில் என்னை வேட்பாளராக ஐக்கிய தேசிய முன்னணி களமிறக்கினால் வெற்றியடைவேன் என்பது உறுதி.” என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகக் கரு ஜயசூரியவே களமிறங்குவார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும் படிக்க...
திரைமறைவில் கை கோர்த்துள்ள மைத்திரி – சஜித்?
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆகியோரின் கூட்டில் பலமான மூன்றாவது அணியொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் திரைமறைவில் இடம்பெற்று வருவதாக இருதரப்பிலுமுள்ள நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது. ஐக்கியமேலும் படிக்க...
யாழில் வழிப்பறிக் கொள்ளைகள்: அச்சத்தில் மக்கள்
யாழ்ப்பாணம் – வழுக்கையாற்றுப் பகுதியில் வழிப்பறிக்கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது என குற்றஞ்சாட்டப்படுகிறது. அந்த வீதியில் நிலைகொண்டிருக்கும் கொள்ளையர்கள் வீதியில் செல்பவர்களை வழிமறித்து, பணம், நகைகளைப் பறிக்க முற்படுகின்றனர். நேற்றுமுன்தினம் காலை தனிமையில் சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி, தாலிக்கொடி என்பன அறுத்துச்மேலும் படிக்க...
“வாக்களித்த தமிழர்களை நட்டாற்றில் விட்டுள்ள கூட்டமைப்பு”
தமிழ் மக்களுக்கு காலத்திற்கு காலம் வாக்குறுதிகளை வழங்கி வரும் கூட்டமைப்பு நல்லாட்சியில் அனைத்தையும் பெற்றுத்தருவதாக கூறி ஈற்றில் தமிழர்களை நட்டாற்றில் விட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில்மேலும் படிக்க...
தமிழரின் கொள்கையில் ஒருமைத்துவம் கொண்ட வர்கள் மக்கள் பிரதி நிதிகளாக வேண்டும்
தமிழரின் வருங்காலம், கொள்கையில் ஒருமைத்துவம் கொண்ட மக்கள் பிரதிநிதிகளில் கணிசமானவர்கள் இனிவரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அப்போதுதான், தேசியக் கட்சிகளதும் அதனுடன் சேர்ந்த கட்சிகளதும் செயற்பாடுகளை எதிர்கொள்ள முடியும் எனமேலும் படிக்க...
இந்து ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் பௌத்த மயமாக்கலைக் கண்டித்து போராட்டம்
இந்து ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பௌத்த மயமாக்கலைக் கண்டித்து யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் முன்பாக இன்று காலை அமைதிப் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. இந்து அமைப்புக்களின் ஒன்றியம் சார்பில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் ஒழுங்கமைப்பில் இந்த போராட்டம் மிகமேலும் படிக்க...
வவுனியாவில் பொருத்தப்பட்ட 5ஜி கோபுரம்
வவுனியா திருவாற்குளம் விளையாட்டு மைதானம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 5ஜி கோபுரம் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் 5ஜி கோபுரம் என்று உறுதிப்படுத்தப்பட்டு ஆவணம் வழங்கும்பட்சத்தில் அக்கோபுரம் உடனடியாக அங்கிருந்து தூக்கி எறியப்படும் என்று வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார். வவுனியாமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- ஐஎஸ் அமைப்பின் தலைமைக்கு தொடர்பா? ஐநா நிபுணர்கள் விசேட அறிக்கை
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களிற்கு ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி உரிமை கோரியிருந்தார் ஆனால் உண்மையில் இவ்வாறான தாக்குதல்கள் குறித்து ஐஎஸ் அமைப்பிற்கு முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை என ஐநா தெரிவித்துள்ளது ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்கு அதன் விசேட கண்காணிப்பாளர்கள்மேலும் படிக்க...
விளையாட்டுத் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய மேயருக்கு 5 வருட சிறை
ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்ணான்டோ மற்றும் பிரேமசிறி பரணமான்ன ஆகியோருக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கி ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டைக்கு சென்ற ஐக்கிய தேசியக் கட்சியினரை நோக்கி துப்பாக்கியுடன் ஓடிமேலும் படிக்க...
ஐ.தே.கவின் வேட்பாளராக சஜித் களமிறங்கமாட்டார்!
“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ போட்டியிடமாட்டார். கட்சியின் மத்திய செயற்குழு அவருக்கு அனுமதி வழங்கவே இல்லை. எமது வேட்பாளர் யார் என்று விரைவில் அறிவிக்கப்படும்.” என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் அமைச்சருமான ரவி கருணாநாயக்கமேலும் படிக்க...
“நாட்டையும், நாட்டு மக்களையும் வெற்றிபெறச் செய்வதொன்றே எமது நோக்காகும்”
நாட்டையும், நாட்டு மக்களையும் வெற்றிபெறச் செய்வதே பொதுஜன பெரமுனவின் ஒரே நோக்கமாகும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக்ஷ, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் போட்டியிட முடியாத நிலையேற்பட்டுள்ளமையால், அவரால் நியமிக்கப்படும் ஜனாதிபதி வேட்பாளரைக் களமிறக்குவோம்மேலும் படிக்க...
இந்தியாவில் வாழும் அகதிகளை இலங்கைக்கு அழைத்து வர உதவுமாறு கோரிக்கை
சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் (IOM) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தலைவர் திரு.சரத் டாஷ் (Mr.Sarat Dash) ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநர் அலுவலகத்தில் இன்று (02) முற்பகல் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 389
- 390
- 391
- 392
- 393
- 394
- 395
- …
- 433
- மேலும் படிக்க
