Main Menu

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தன் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேல் நீதிமன்ற நீதிபதி எம் வை எம் இர்சடீன் முன்னிலையில் பிரசன்னப்படுத்தியபோது சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டத்தரணிகள் நீதிமன்றிற்கு சமூகம் தராமையினால் பிள்ளையானை எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்ட்டர் என அழைக்கப்படும் எட்வில் சில்வா கிருஷ்ணானந்தராஜா, கஜன் மாமா என அழைக்கப்படும் கனகநாயகம், இராணுவ புலனாய்வு உறுப்பினர் கலீல், முன்னாள் இராணுவ வீரர் மதுசிங்க ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...