இலங்கை
யாழ்ப்பாண பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பிரச்சினையில் இந்தியா தலையீடு?
யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை கட்டுவது தொடர்பான செய்தியொன்று இந்தியாவிலிருந்து இலங்கைத் தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நள்ளிரவில் இடித்தழிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பை அடுத்து இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.மேலும் படிக்க...
வவுனியா விபத்தில்: ஒருவர் படுகாயம்
வவுனியா- செட்டிகுளம் நகர்பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செட்டிகுளம் நகர்பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் வீதியை கடக்க முற்பட்டபோது மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கி சென்ற டிப்பர் வாகனம் மோதியதில் குறித்தமேலும் படிக்க...
கொரோனா தொற்று நிலவரம் தொடர்பான அறிக்கையில் சந்தேகம் – ஐக்கிய மக்கள் சக்தி !
அரசாங்கம் நாளாந்தம் வெளியிடும் கொரோனா தொற்று நிலவரம் தொடர்பான அறிக்கை தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி சந்தேகம் வெளியிட்டுள்ளது. மேலும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளால் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட கொரோனா தொற்றுகள் இப்போது கண்டியில் உள்ள புனித இடங்களில் பரவி வருவதாகவும்மேலும் படிக்க...
யாழில் புகையிரத சேவை வழமைக்கு திரும்பியது!
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரனமாக நிறுத்தப்பட்டிருந்த புகையிரதே சேவைகள், இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு புகையிரதங்கள் இன்று புறப்பட இருக்கின்றது. முதலாவதாக காங்கேசன்துறையில் இருந்து காலை 5.30க்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்துமேலும் படிக்க...
இடமாற்றத்தில் பாரபட்சம் காட்டக் கூடாதென வலியுறுத்தி யாழில் ஆசிரியர்கள் போராட்டம்
ஆறு வருடம் கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்கள், தமக்கான இடமாற்றத்தை வழங்க கோரி மாபெரும் போராட்டமொன்றை யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்துள்ளனர். யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டமானது, வட.மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்று வருகின்றது. குறித்தமேலும் படிக்க...
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் இராணுவப் பயிற்சி – சரத் வீரசேகர
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். இந்த முன்மொழிவினை எண்ணி எவரும் அச்சமடையத் தேவையில்லை என்றும், இந்த தீர்மானம் நாட்டின் முன்னேற்றத்தைமேலும் படிக்க...
வவுனியாவில் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறக்கப்படுகின்றன
வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் தற்காலிகமாக மூடப்பட்ட நகர பாடசாலைகள், நாளை (திங்கட் கிழமை) முதல் மீண்டும் செயற்படவுள்ளதாக கூறப்படுகின்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நகரப்பகுதிகள் உட்பட்ட 19 கிராமசேவையாளர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்தமேலும் படிக்க...
கிளிநொச்சியில் சில குளங்கள் வான் பாய்வதனால் போக்குவரத்து பாதிப்பு
கிளிநொச்சி- கரியாலை, நாகபடுவான் குளம் மற்றும் ஜெயபுரம், பல்லவராயன் கட்டு குளம் ஆகியன தொடர்ந்து வான் பாய்வதனால் வேரவில் கிராஞ்சி வலைப்பாடு உள்ளிட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கன மழையினால் குளங்கள் நிரம்பி வெளியேறும் அதிகளவானமேலும் படிக்க...
பாகிஸ்தான் பிரதமர் விரைவில் இலங்கைக்கு விஜயம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார். அதன்படி அவர் அடுத்த வாரமளவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அவர், 5 நாட்கள் நாட்டில் தங்கியிருந்து பல முக்கியஸ்தர்களுடன்மேலும் படிக்க...
கூட்டமைப்பின் வசமிருந்த திருகோணமலை பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீலங்கா பொதுஜன கைப்பற்றியது
கடந்த 25 வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த திருகோணமலை பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியுள்ளது. திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) புதியமேலும் படிக்க...
கூட்டமைப்பில் இருந்து விலகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது – செல்வம் அடைக்கலநாதன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து டெலோ வெளியேறவுள்ளதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானது என அறிய முடிகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகளோடு ஜெனீவா விவகாரம் தொடர்பாகக் கலந்துரையாடாமல் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாகவே முடிவெடுத்திருந்ததாக செய்திகள் வெளியாகின. அத்தோடுமேலும் படிக்க...
சீரற்ற வானிலை காரணமாக, 23 ஆயிரத்து 380 பேர் பாதிப்பு!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, 23 ஆயிரத்து 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கிழக்கு மாகாணத்திலேயே அதிகளவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்குமேலும் படிக்க...
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இம்முறை இடம்பெறாது என அறிவிப்பு!
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இம்முறை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். நிலவுகின்ற கொரோனா சூழ்நிலை காரணமாக திருவிழாவை நடத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
இலங்கையில் மனித உரிமை நிலை மோசமடைந்து உள்ளதாக கவலை!
இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சிறுபான்மை சமூகத்தினர் பாகுபாட்டையும் அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்குவதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறுபான்மைமேலும் படிக்க...
தைத் திருநாளில் வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயிலில் விசேட பூசை!
தைப்பொங்கல் தினமான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆலயங்களில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் இன்று காலை ஏழு மணி தொடக்கம் விசேட பூசைகள் இடம்பெற்றன. இந்த பூசைகளில் ஒரு சில பொதுமக்கள் மாத்திரம் கலந்துகொண்டமேலும் படிக்க...
இலங்கை அரசின் உரிமை அழிப்புக்கு எதிராக பன்னாட்டு செயற்பாட்டாளர்களின் கூட்டு அறிக்கை!
இலங்கை அரசாங்கம், மக்களின் அடிப்படை உரிமைகளையும் நல்லிணக்க செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக அழித்தொழித்து வருவதற்கெதிரான கூட்டு கண்டன அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 10ஆம் திகதி, இலங்கையை தாயமாகக் கொண்ட பல்வேறு நாடுகளில் வதியும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் சமூகமேலும் படிக்க...
நல்லூர் கந்தசுவாமி கோயிலை அடையாளப் படுத்தும் அலங்கார வளைவு திறக்கப் பட்டது!
யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை அடையாளப்படுத்தும் அலங்கார வளைவு இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியான ஏ-9 வீதிக்கு அண்மையில், செம்மணிப் பகுதியில் இந்த அலங்கார வளைவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் முயற்சியிலும், நிதிமேலும் படிக்க...
இனப் பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டது – காஞ்சன ஜயரத்ன!
இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாகாண சபை உறுப்பினர் ஒன்றியத்தின் தலைவர் காஞ்சன ஜயரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டமேலும் படிக்க...
திருக் கேதீஸ்வரத்தில் தைத் திருநாளை முன்னிட்டு விசேட பூசை!
தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) காலை வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் பொங்கல் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன. கொரோனாமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 287
- 288
- 289
- 290
- 291
- 292
- 293
- …
- 436
- மேலும் படிக்க
