இலங்கை
மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை

இலங்கையிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் திடக்கழிவு முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்காகவும், சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்காகவும் புதிய அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்களின் திடக்கழிவு முகாமைத்துவ (Solid Waste Management) நடவடிக்கைகளை மிகவும் சீரான முறையில் முறைப்படுத்துவதற்காக, பொது நிர்வாகம், மாகாண சபைகள்மேலும் படிக்க...
பொலிஸார் பிடியில் இருந்து தப்பிச்சென்ற நபர் – மீண்டும் கைது செய்ய சந்தேகநபர் மீது துப்பாக்கிசூடு

அம்பாறை பொது வைத்தியசாலையில் வைத்து நேற்று (18) அதிகாலை பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிய சந்தேக நபர் பின்னர் பொலிஸாரினால் சுடப்பட்டு கைது செய்யப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையில் கடும் பாதுகாப்பில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த சந்தேக நபர்மேலும் படிக்க...
யாழில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்தில் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் , பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நாவாந்துறை பகுதியை சேர்ந்த ப. சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விசாரணைக்காக நேற்றைய தினம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்திற்கு சுரேஷ்குமார் அழைக்கப்பட்ட நிலையில் ,மேலும் படிக்க...
2025-ல் இலங்கை பொருளாதாரம் 5.0% வளர்ச்சி

2025-ஆம் ஆண்டில் இலங்கைப் பொருளாதாரம் 5% வளர்ச்சி அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அரசாங்க நிதிப்பற்றிய குழுவின் முன் இலங்கை மத்திய வங்கியின் 2025 ஆண்டுப் பொருளாதார ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தபோது, விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் ஆகிய பிரதான பொருளாதாரத்மேலும் படிக்க...
17 ஆவது தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு இன்று

யுத்த வெற்றியின் 17 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, “தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு” கடந்த ஆண்டுகளைப் போலவே பாரம்பரிய முறைப்படி இன்று (19) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ நினைவிடத்திற்கு முன்பாகமேலும் படிக்க...
வெள்ளவத்தையில் பதற்றம் : கடற்கரையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அமைதியின்மை

கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது இன்று மாலை 5 மணியளவில் வெள்ளவத்தை கடற்கரைப்பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள மற்றும் தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். இதன்போது பாதுகாப்புமேலும் படிக்க...
தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு: மஹிந்தவிற்கு அழைப்பில்லை?

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய இராணுவ வெற்றி தின நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இதுவரை எந்தவொரு அழைப்பும் கிடைக்கப்பெறவில்லை என அவரது ஊடகச் செயலாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். 5 ஆவது நிறைவேற்று அதிகாரம்மேலும் படிக்க...
விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பாராளுமன்ற விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள யுத்த வீரர்கள் நினைவிடத்தில் இன்று (18) நடைபெற்ற ஒத்திகைப் பணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாளை (19)மேலும் படிக்க...
ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டார் பிரதமர் ஹரினி

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று பிற்பகல் (18) ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டார். அதன்படி, பிரதமர் பிற்பகல் சுமார் 1.20 மணியளவில், லண்டன் நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 403-ல் மூலமாக நாட்டிலிருந்து புறப்பட்டார். ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறும்மேலும் படிக்க...
யாழ். பல்கலைக் கழகத்தில் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் இன்று (மே 18) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியது. இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு பூபியில் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட, ஏனைய சுடர்கள்மேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் – முதலமைச்சர் ஜோசப் விஜய்

தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் இன்று (மே 18) வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் (x )தலத்தில் ” முள்ளிவாய்க்கால் நினைவுகளைமேலும் படிக்க...
தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு நாளை

யுத்த வெற்றியின் 17ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, “தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு” கடந்த ஆண்டுகளைப் போலவே பாரம்பரிய முறைப்படி நாளை (19) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில், பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ நினைவிடத்திற்கு முன்பாக இந்தமேலும் படிக்க...
மல்வானை வீட்டில் இருந்து வௌியேறும் பல்கலை மாணவர்கள்

தொம்பே பிரதேச செயலகத்தின் பொறுப்பிலுள்ள மல்வானை பகுதியில் அமைந்துள்ள காணி மற்றும் வீட்டை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன்று (18) பிரதமருடன் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர்மேலும் படிக்க...
மன்னார் கள்ளி கட்டைக்காடு பகுதியில் பட்டியில் ஆடு அடைக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

மன்னார் பகுதியில் தனது ஆடுகளை பட்டியில் அடைக்கச் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மன்னார் கள்ளிக்கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய அனோஜன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் தனது வீட்டில்மேலும் படிக்க...
இந்தியாவிற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் மேற்கொண்ட இலங்கை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு

இலங்கை நாடாளுமன்றத்தின் பெண்கள் நாடாளுமன்றக் கூட்டமைப்பின் (Women Parliamentarians’ Caucus) 19 பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவினர், கடந்த மே 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். இலங்கையின் மகளிர் மற்றும் சிறுவர் விவகாரமேலும் படிக்க...
இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

கடந்த யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய மக்கள் உப்புக்கூட இல்லாமல் தங்களிடமிருந்த அசிரியை வைத்துக் கொண்டு கஞ்சி காய்ச்சி அவர்களது பசியைப் போக்கியிருந்தனர். இந்நிலையில் அப்போதைய சூழ்ந்நிலையில் அங்கிருந்த மக்கள் கஞ்சி காய்ச்சி அருந்தியதை நினைவு கூர்ந்து வருடந்தோறும் இக்காலப்பகுமியில் முள்ளிவாய்க்கால்மேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிப்பு

இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்று வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் வவுனியாவிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன. வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியாமேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று

2009 இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களும், அதிலிருந்து மீண்டவர்களும் அனுபவித்த இன்னல்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இனவெறியை எதிர்த்து, தன்னாட்சி உரிமைக்காக போராடிய ஈழ தமிழர்களை கொன்று குவித்து, போர் முடித்து வைக்கப்பட்ட நாள் தான்மேலும் படிக்க...
மேல் மாகாண ஆளுநர் பதவி விலக முடிவு

மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக ஹனீஃப் யூசுப் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் இன்று (17) ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் என்ற பொதுப் பதவியின் பொறுப்புகள், வெளிநாட்டுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- …
- 469
- மேலும் படிக்க

