வெள்ளவத்தையில் பதற்றம் : கடற்கரையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அமைதியின்மை
கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது
இன்று மாலை 5 மணியளவில் வெள்ளவத்தை கடற்கரைப்பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள மற்றும் தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது பாதுகாப்பு நிமித்தம் பெருமளவிலான காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நிலையிலும், அங்கு பதற்றநிலை ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வெள்ளவத்தை கடற்கரை வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
