இலங்கை
எரிசக்தி அமைச்சர் பதவி விலக வேண்டும் – நாமல் ராஜபக்ஷ

எரிசக்தி அமைச்சர் மீது பாரிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கோரும் வரை காத்திருக்காமல் அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை (31) ஊடகவியலாளர்கள்மேலும் படிக்க...
மாணவரைத் தாக்கிய மூன்று மாணவர்களும் பராமரிப்பு நிலையத்திற்கு

ஹட்டன் நகரிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றின் மாணவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்ட மூன்று மாணவர்களையும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி வரை வேரலவத்த சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹட்டன் மாவட்டமேலும் படிக்க...
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் பதவி விலகல்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து சரத் கணேகொட மார்ச் 31ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், நிதி அமைச்சின் செயலாளரால் புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்படும் வரை, ஏ.கே.டி.டி. டிமல் அரந்தர பதில் தலைவராகப்மேலும் படிக்க...
தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு இலங்கை தமிழரசு கட்சியின்மேலும் படிக்க...
கெஹெலிய காலத்து கொள்வனவுகள் குறித்து வெளிவரப்போகும் ‘தடவியல்’ அறிக்கை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ விநியோகக் கொள்வனவு நடவடிக்கைகள் குறித்து அரசாங்க கணக்காய்வாளர் நாயகத்தினால் தடவியல் கணக்காய்வு (Forensic Audit) ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக சட்டமாமேலும் படிக்க...
செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த CID அதிகாரி

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான ‘கணேமுல்ல சஞ்ஜீவவின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்திக்கு, காவல்துறையின் காவலின் கீழ் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரி ஒருவருக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்றுமேலும் படிக்க...
மட்டக்களப்பில் நடைபெற்ற உணவுக் கண்காட்சி

நான்கு மாதாகாலமாக சமையற் கலைப் பயிற்சியில் ஈடுபட்டு வந்த இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. அம்மன் மகளிர் பவுண்டேஷனின் ஏற்பாட்டில், சுவிஸ் நாட்டிலுள்ள பொன்டானா பவுண்டேசன் நிறுவனத்தின் நிதிமேலும் படிக்க...
மின் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிப்பதற்குப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும், நுகர்வோர் பயன்படுத்தும் மின்சார அலகுகளின் அடிப்படையில் இம்முறை மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் சதவீதம் மாறுபட்டுள்ளது. இந்த மின்சாரக் கட்டணமேலும் படிக்க...
ஓமானில் கைதான மிதிகம சூட்டி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு திட்டமிட்ட படுகொலைச் சம்பவங்கள், பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதப் பரிமாற்றங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என அடையாளம் காணப்பட்ட ராஜபக்ச பத்திரணகே பிரபாத் மதுசங்க அல்லது ‘மிதிகம சூட்டி’ என்பவர் இன்று அதிகாலை இலங்கைக்குமேலும் படிக்க...
மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பில், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனித புதைகுழி கண்டறியப்பட்ட இடத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின. நீதிமன்ற உத்தரவின்படி, பாதுகாப்பு படைகள் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அகழ்வுப் பணிகளை தொடங்கி உள்ளனர். 1990ஆம் ஆண்டுமேலும் படிக்க...
ஓமானில் கைதான மிதிகம சூட்டி நாளை இலங்கைக்கு

ஓமானில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த உறுப்பினரான மிதிகம சூட்டி என்ற பிரபாத் மதுசங்க நாளை (30) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார். பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இவர், சர்வதேச பொலிஸாரால் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில்,மேலும் படிக்க...
இந்தியாவிலிருந்து வந்த எரிபொருள் கப்பல் – ஜனாதிபதி அநுர நன்றி தெரிவிப்பு

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை காரணமாக நாடு எதிர்நோக்கியுள்ள வலுசக்தி பிரச்சினைக்கு தீர்வாக இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தியோகப்பூர்வ எக்ஸ் பதிவில்மேலும் படிக்க...
பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி என். எஸ். குமநாயக்கவினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ‘டித்வா’ புயலுடன் ஏற்பட்ட அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, நாட்டில்மேலும் படிக்க...
‘நெடுந்தாரகை’ படகுச் சேவை மீண்டும் ஆரம்பம்

நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்தில் ஈடுபடும் பழுதடைந்துள்ள ‘நெடுந்தாரகை’ படகினைத் திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவது குறித்த கலந்துரையாடல்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன இதற்கமைய ‘நெடுந்தாரகை’ படகினை நேரடியாகப் பார்வையிட்ட வடபிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, அதனைத் தற்காலிகமாகத் திருத்துவதற்கான நடவடிக்கைகளைமேலும் படிக்க...
கனிய வளங்களை கொண்டு செல்லும் வாகனங்களை GPSஊடாக கண்காணிக்க நடவடிக்கை

வடக்கில் கனிய வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தடயறி ((GPS)) ஊடாக கண்காணிக்கும் பொறிமுறையை விரைவில் அமுல் படுத்தவுள்ளதாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரும் , மாநகர சபை உறுப்பினருமான எஸ்.கபிலன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவளமேலும் படிக்க...
யாழ் மாநகரசபை தன்னிச்சையாக செயற்பட்டால் சேவையை முடக்கி போராடுவோம்

யாழில் இ.போ.சவின் இறைமையுள்ள நிலப்பரபில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூடத்தை நிர்வகிப்பது தொடர்பில் யாழ். மாநகர சபைக்கும் இ.போ.சவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள குழப்ப நிலை இன்று (28)பெரும் பிரச்சினையாக மாறியதால் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் சிலமணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் படிக்க...
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் இலங்கைக்கு பெரும் பாதிப்பு?

ஹோர்முஸ் நீரிணை முடக்கப்படுவதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வடைந்து, அதன் மூலம் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் Kiel உலகப் பொருளாதார ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட இந்தமேலும் படிக்க...
பொலிஸ் சேவைக்கு 7500 பேரை இணைக்க நடவடிக்கை
வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் 7500 பேரை புதிதாக பொலிஸ் சேவையில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசேட பொலிஸ் அதிரடிப்படையில் பொலிஸ் கான்ஸ்டபள், பெண் பொலிஸ் கான்ஸ்டபள், பொலிஸ் கான்ஸ்டபள் சாரதி உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்சேர்ப்புமேலும் படிக்க...
இளவாலை வைத்தியசாலை சம்பவம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

யாழ்ப்பாணம், இளவாலை பிரதேச வைத்தியசாலையில் அவசர சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட மாணவன் அனுமதிக்கப்படாதது மற்றும் அங்கு வைத்தியர்கள் கடமையில் இல்லாதிருந்தது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இளவாலை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும்மேலும் படிக்க...
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுக்குழுத் தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு

வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுக்குழுக்களின் தலைவர்களாகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை மார்ச் 26ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள தர்ஷன எம். பெரேரா, ஆஸ்திரியா மற்றும் PRUN தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- …
- 437
- மேலும் படிக்க
