Main Menu

Auto-école நிலையங்கள் – 30 % வீதத்தினால் குறைப்பு

வாகனசாரதி பத்திரத்தினை ( permis de conduire) முறையாக கற்று பெற்றுக் கொள்வதற்கு அண்ணளவாக 1,600€ இருந்து 1,800€ வரை செலவாகின்றது என மதிப்பிடப்பட்டிருக்கின்ற நிலையில், இனி வரும் காலங்களில் அந்த தொகை 30 % வீதத்தினால் குறைக்கப்படுகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த யூன் 1ம் திகதி முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளதோடு, 30% வீதக்குறைப்பு என்பது வாகனஓடுதல் முற்பதிவு நிறுத்தப்படுதல், நிர்வாக செலவு உட்பட ஆகிய விடயங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

le coût d’annulation d’une heure de conduite, le montant des frais administratifs et des cours théoriques et pratiques. Exit les frais cachés et les heures de conduite facturées en trop. Le prix de chaque prestation sera notée et vérifiable par l’élève pour une plus grande transparence.

வாகனசாரதி பத்திர கற்றல் முறை என்பது APPS செயலிகள், 3 வருட வாகனஓட்டுனர் அனுபவம் உள்ள ஒருவருடன் வாகனஓட்டுதல் பயிற்சிக்காரினை வாடகைக்கு தனியாக எடுத்து ஓடுதல் உட்பட பல்வேறு விடயங்கள், Auto-école நிறுவனங்களுக்கு பெரும் நெருக்கடியினை ஏற்படுத்தியிருந்தன.

சராசரியாக 1,600€ இருந்து 1,800€ வரை செலவாகின்றது என மதிப்பிடப்பட்டிருந்தாலும் ஒருவர் 5 000€ வரை சாரதிபத்திரத்தினை பெறுவதற்கு செலவு செய்கின்ற நிலைகூட காணப்படுகின்றது. இது Auto-école நிலையங்களின் பகல் கொள்ளை என பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் Auto-école நிலையங்கள் தற்போது 30 வீதத்தினால் குறைப்பு செய்துள்ளதோடு, நாடாளாவியரீதியில் 12,000 நிலையங்கள் அரசாங்கத்துடன் ஒப்பந்தமிட்டுள்ளன.

பகிரவும்...