Author: trttamilolli
பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் – 13 பேர் உயிரிழப்பு

லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக லெபனான் சுட்டிக்காட்டியுள்ளது. இன் எல் ஹிலாவேயில் உள்ள மசூதிக்குமேலும் படிக்க...
சென்னையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

சென்னையில் சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், கே.கே. நகர், எம்ஜிஆர் நகர், கீழ்ப்பாக்கம், சவுகார்பேட்டை, திருவேற்காடு, அம்பத்தூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சிஆர்பிஎப் வீரர்கள் துணையுடன் சோதனை நடத்தி வருகின்றனர். இச்சோதனையானது, தங்க நகைமேலும் படிக்க...
தனி ஒருவரின் செயலை வைத்து இலங்கையை மதிப்பிட வேண்டாம்: நியூசிலாந்து பெண் வலியுறுத்தல்

தென்கிழக்கு ஆசியா முழுவதும் தனியாகப் பயணம் செய்துவரும் 24 வயதுடைய நியூசிலாந்து பெண் ஒருவர், இலங்கையில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்தபோது, பின்னால் துரத்தி வந்த நபரொருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, ஆபாசமாகத் தன்னை வெளிப்படுத்தியதால் “அச்ச உணர்வுடன்” இருந்ததாகத் தெரிவித்துள்ளார். கிறிஸ்ட்சர்ச்சைச்மேலும் படிக்க...
2025 வெளியானதில் அதிக வசூலை குவித்த TOP 10 படங்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் த்ருவ் விக்ரம் நடித்த பைசன் திரைப்படம் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் 10 ஆம் இடத்தில் உள்ளது. சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த மதராஸி திரைப்படம் 9 ஆம் இடத்தை பிடித்திருக்கிறது. பிரதீப் ரங்கநாதன்மேலும் படிக்க...
பிரான்ஸ் – டிஜிட்டல் Carte Vitale பயன்பாடு

நவம்பர் 18 முதல் டிஜிட்டல் Carte Vitale பயன்பாட்டை தற்போது பிரான்ஸ் முழுவதும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். முன்பு France Identité செயலி மற்றும் புதிய அடையாள அட்டை இருந்தால்தான் நிறுவ முடிந்தது; தற்போது Carte Vitale செயலியை பயன்படுத்தி செயல்படுத்தலாம்.மேலும் படிக்க...
திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த உத்தரவை அமுல்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான தடையை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, டிசம்பர் மாதம் 16மேலும் படிக்க...
பாடல்பெற்ற சிவஸ்தலங்களில் புத்தர் சிலைகளை நிறுவுவதுதான் அரசின் இன, மத நல்லிணக்கமா? -சுரேஷ் பிரேமச்சந்திரன்

திருகோணமலையிலும் திருக்கோணேஸ்வரத்திலும் அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் தமிழர்களின் மத வழிபாட்டு உணர்வுகளையும் சிதைக்கும் வகையில் அங்கு சட்டத்திற்குப் புறம்பாக நிர்மாணிக்கப்பட்டுவரும் புதிய புத்தர் சிலைகளும் அந்தப் பகுதியை பௌத்தமயமாக்கும் செயற்பாடுகளும் நாட்டின் வளர்ச்சிக்கும் இன ஐக்கியத்திற்கும் ஒருபோதும் பங்களிக்காது என்று தெரிவித்துள்ளமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன – ஜனாதிபதி அநுர குமார

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். எனினும், இந்த தாக்குதல்களுக்கு பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணரும் அரசாங்கத்தின் முயற்சியை ஒருபோதும் தடுக்க முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போதுமேலும் படிக்க...
அந்தியேட்டி கிரியை ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் அன்னாரது 60வது பிறந்த நாளும் – அமரர். உருத்திரமூர்த்தி முருகையா ஜெயக்குமார் (19/11/2025)

தாயகத்தில் அளவெட்டியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Fontainebleau நகரை வதிவிடமாகவும் கொண்டு இருந்த அமரர் உருத்திரமூர்த்தி முருகையா ஜெயக்குமார் அவர்களின் அந்தியேட்டி கிரியையும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் 19ம் திகதி நவம்பர் மாதம் புதன் கிழமை அன்னாரின் இல்லத்தில் அனுஷ்டிக்கின்றார்கள். இன்று அமரர்மேலும் படிக்க...
ஒரே தளத்தில் எல்லாம்! X தளத்தின் புதிய வசதி

WhatsApp செயலிக்குப் போட்டியாகப் பயனர்கள் Chat செய்யும் வசதியை X தளம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் Voice and Video Call செய்யும் வசதி மற்றும் கோப்புகளைப் பகிரும் வசதி உள்ளிட்டவையும் இதில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி iOS, Web பயனர்களுக்கு அறிமுகமாகியுள்ளமேலும் படிக்க...
எதிர்க்கட்சிகள் ஒழுங்கு செய்துள்ள பேரணியில் பங்கேற்கும் மஹிந்த

எதிர்வரும் 21ஆம் திகதி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒழுங்கு செய்துள்ள பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொள்ள உள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆசீர்வாதம் பெறுவதற்காகக் கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்தபோது ஊடகங்களுக்குக் கருத்துத்மேலும் படிக்க...
யாழில் தொடரும் மழை-அதிகூடிய மழை வீழ்ச்சி யாழ்ப்பாணத்தில் பதிவு

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் யாழ்ப்பாணத்திலையை அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அத்துடன் மழையினால் 14 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும் , யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமைமேலும் படிக்க...
அமெரிக்காவிற்-கான இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பு

அமெரிக்காவிற்கான ஏற்றுமதி பொருட்களை கடந்த ஐந்து மாதங்களில் இந்தியா அதிகரித்துள்ளது. ட்ரம்பின் வரி விதிப்பு அமுலில் இருந்தாலும் ஏற்றுமதியானது 14.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன, ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் முடிவடையும்மேலும் படிக்க...
பாம்பன் நாட்டுப்படகு மீனவர் வலையில் சிக்கிய 112 கிலோ எடை கொண்ட மீன்

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் வலையில் 112 கிலோ எடை கொண்ட ‘மெகா சைஸ்’ மஞ்சள் வால் கேரை மீன் இன்று (18) அதிகாலை சிக்கியதால் பாம்பன் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ராமநாதபுரம்மேலும் படிக்க...
தங்காலையில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி

தங்காலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. தங்காலை – உணாகூருவ வாவிக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 68 வயதுடைய நபர் ஒருவரும், 59 வயதுடைய அவரதுமேலும் படிக்க...
திருகோணமலை விவகாரத்தில் எவருக்கும் அரசியல் இலாபம் தேட இடமளியோம் – நளிந்த ஜயதிஸ்ஸ

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை வைத்து கொண்டு எந்தவொரு தரப்பினருக்கும் அரசியல் இலாபம் ஈட்டுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இந்த விவகாரம் குறித்த செய்தியாளர்கள்மேலும் படிக்க...
கொங்கோவில் அமைச்சர் ஒருவருடன் பயணித்த விமானம் விபத்துக்கு உள்ளானது

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் அமைச்சர் லூயிஸ் வாடும் கபாம்பா மற்றும் சுமார் 20 பேரை ஏற்றிச் சென்ற எம்ப்ரேயர் ERJ‑145LR விமானம் விமான நிலையத்தில் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. தி சன் செய்தித்தாளின்படி, கின்ஷாசாவிலிருந்து திரும்பிய விமானம், காலைமேலும் படிக்க...
பிரித்தானியா முழுவதும் பலத்த காற்று

பிரித்தானியா முழுவதும் ஆர்க்டிக் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் மேற்கு பகுதியில், வேல்ஸில் கடந்த வாரம் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்திலிருந்து மக்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் மீள்வதற்காக உதவி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக சர்வதேச செய்திகள்மேலும் படிக்க...
இலங்கையில் பெண்களை விட ஆண்கள் அதிகம் தற்கொலை செய்கின்றனர் – ஆய்வில் தகவல்

இலங்கையில் ஆண்கள் தொடர்ந்து மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதுடன், இதனால் தற்கொலை செய்து கொள்ளும் விகிதம் அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, 100,000 ஆண்களுக்கு 27 பேரும், 100,000 பெண்களுக்கு ஐந்து பேரும் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- …
- 1,076
- மேலும் படிக்க

