Main Menu

Aurora புயல்! – இல் து பிரான்சுக்குள் போக்குவரத்து தடை

Aurora புயல் காரணமாக இல் து பிரான்சுக்குள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன.

இன்று வியாழக்கிழமை காலை இல் து பிரான்ஸ் முழுவதற்கும் Aurora புயல் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பல சேதங்களை இரவு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் மர முறிவு ஏற்பட்டு போக்குவரத்தை முடக்கியுள்ளது.

குறிப்பாக RER A பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. Nanterre-Préfecture மற்றும் Cergy–Le-Haut/Poissy நகரங்களுக்கிடையே போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

*RER B சேவைகளும் தடைப்பட்டுள்ளன. ( காலை 9 மணி நிலவரம்)

RER C சேவைகள் Péreire Levallois இருந்து Pontoise வரை தடைப்பட்டுள்ளன.

Versailles-Château/Saint-Quentin-en-Yvelines மற்றும் Champ-de-Mars-Tour-Eiffel நகரங்களிடையே போக்குவரத்து காலை 8 மணி வரை பாதிக்கப்பட்டிருந்தது.

RER D மற்றும் ட்ராம் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.