Main Menu

யுத்த நிறுத்தம் தொடர்பான யோசனையை ஏற்றுக் கொண்டது ஹமாஸ் – இஸ்ரேல் மறுப்பு

ஹமாஸ் அமைப்பு  மூன்று கட்ட யுத்த நிறுத்தம் தொடர்பான யோசனைகளையும் கைதிகள் பணயக்கைதிகள் பரிமாற்றம் தொடர்பான யோசனைகளையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள அதேவேளை இஸ்ரேல் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளது.

கத்தார் எகிப்துடன் இணைந்து மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்ட அமெரிக்கா ஹமாஸ் அமைப்பின் யோசனைகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் உள்ள நேசநாடுகளுடன் இது குறித்து ஆராயவுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

முதல்கட்டமாக 42 நாட்கள் யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் என்ற யோசனையை ஏற்றுக்கொண்டுள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் தனது சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுதலை செய்தால் 33 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுதலை செய்ய தயார் எனவும் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக இஸ்ரேல் காசாவிலிருந்து அரைவாசிக்கும் மேற்பட்ட படையினரை விலக்கிக்கொள்ளவேண்டும் தென்காசாவிலிருந்து பாலஸ்தீனியர்கள் வடக்கிற்கு செல்ல அனுமதிக்கவேண்டும் என்ற யோசனையையும் ஹமாஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக 42 நாட்கள் யுத்த நிறுத்தத்தின் பின்னர் காசவில் நீடிக்ககூடிய அமைதியை உருவாக்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்தாகும்.

மேலும் காசாவிலிருந்து இஸ்ரேலிய படையினர் முற்றாக விலக்கிக்கொள்ளப்படுவார்கள் – இஸ்ரேல் பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்தால் ஹமாஸ் தன்னிடம் பணயக்கைதிகயாக உள்ள இஸ்ரேலிய படையினரை விடுதலை செய்யும்.

பகிரவும்...