Main Menu

 சீன ஜனாதிபதியை சந்திக்கும்  முன் பேச்சு வார்த்தைக்குத் தயார் – புடின் அறிவிப்பு

உக்ரைன் போர் தொடர்பில், பேசுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

சீனா சென்றுள்ள ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு ராணுவ மரியாதையுடன் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங் புடினை வரவேற்ற நிலையில், இரண்டு நாட்கள் சீனாவில் செலவிட இருக்கிறார் புடின்.

சீனா செல்லும் முன் ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்த புடின், உக்ரைன் போர் தொடர்பில் தான் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

நாங்கள் எப்போதுமே பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்ததில்லை என்று கூறியுள்ள புடின், உக்ரைன் தொடர்பில் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க விரும்புகிறோம், என்றாலும், அந்த பேச்சுவார்த்தைகள், ரஷ்யா உட்பட, பிரச்சினையில் சம்பந்தப்பட்டுள்ள எல்லா நாடுகளின் நலனையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பகிரவும்...